யேர்மனியில் நடைபெற்ற அன்னைபூபதி நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நாளும்!

தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவும் நாட்டுப்பற்றாளர் தினமும் வூப்பெற்றால் நகரில் நினைவு கூரப்பட்டது.

நிகழ்வில் பொதுச்சுடரினை நாட்டுப்பற்றாளர் அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மகன் செல்வன். ஆதவியன் சுரேஸ்குமார் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தேசியக்கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவும் நாட்டுப்பற்றாளர் தினமும் வூப்பெற்றால் நகரில் நினைவு கூரப்பட்டது.தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவும் நாட்டுப்பற்றாளர் தினமும் வூப்பெற்றால் நகரில் நினைவு கூரப்பட்டது. Velbert நகரக் கோட்டப்பொறுப்பாளர். திரு. பொன்னையா கிருபாமூர்த்தி அவர்கள் ஏற்றிவைத்தார்.

நாட்டுப்பற்றாளர் பரராசசேகரம் அவர்களின் துணைவியார் நிர்மலராணி பரராசசேகரம் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் Siegen நகரக் கோட்டப்பொறுப்பாளர் திரு அருட்சோதிநாதன் அவர்கள் அணிவித்தார்.

அகவணக்கத்தினை தொடர்ந்து மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் இடம்பெற்றது. நிகழ்வில் கவிதைகள், எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள் இடம்பெற்றன. நிகழ்விலே எசன் தமிழாலயத்தில் பயிலும் சிறுமியின் அன்னை பூபதியைப் பற்றிய கவிதை அனைவரது பாராட்டையும் பெற்றது.

No comments