புதிதாக தேர்தல் நடக்கவேண்டும்!



புதிய எல்லை நிர்ணய அறிக்கையின்படி, வட்டாரங்களது எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் உள்ளுராட்சி சபை தேர்தலிற்கு மீண்டும் புதிய வேட்புமனுக்களை கோரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாது எனவும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அல்லது அரசு நிதி வழங்கல் அடிப்படையில் தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

புதிய எல்லை நிர்ணய அறிக்கையின்படி, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 4,714 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக எல்லை நிர்ணய குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உள்ளுராட்சி சபை தேர்தலிற்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் ரத்து செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அல்லது அரசு நிதி வழங்கல் அடிப்படையில் தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் வட்டார எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் வேட்புமனுக்களை கோரியே தேர்தலை நடாத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.


No comments