பாசத்திற்கான யாத்திரையாம்?

 


இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக இன்று 19ஆம் திகதி புதன்கிழமை எதிர்கட்சிகளின் ஏற்பாட்டில் இலங்கையின் ஜந்து இடங்களிலிருந்து ‘பாசத்திற்கான யாத்திரை’ எனும் பெயரிலான பேரணி ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் வடபகுதிக்கான யாத்திரை இன்று நல்லூர் ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து யாழ்ப்பாண நகரை வந்தடை பேரணியில் பங்கெடுத்தவர்கள் யாழ்ப்பாண நகரில் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக மக்களது ஆதரவு கையெழுத்து பெறும் நடவடிக்கையினையும் முன்னெடுத்திருந்தனர்.

இலங்கையின் 5 இடங்களிலிருந்து 19ஆம் திகதி ஆரம்பமாகும் ‘பாசத்திற்கான யாத்திரை’ 21ஆம் திகதி கொழும்பைச் சென்றடையவுள்ளது.

அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக யாழ்ப்பாணம், மன்னார், காத்தான்குடி, கண்டி மற்றும் கதிர்காமம் ஆகிய ஐந்து இடங்களில் இருந்து ‘பாசத்திற்கான யாத்திரை’ ஆரம்பமாகியுள்ளது.

வட பகுதிக்கான யாத்திரை நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளைத் தொடர்ந்து ஆரம்பமாகி கிளிநொச்சி, வவுனியா என பயணிக்கவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில்  எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும் பாசத்திற்கான யாத்திரையில் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்துள்ளது.


No comments