வடக்கு ஆளுநருக்கு அட்டமத்து சனியன்!!

 


வடமாகாண ஆளுநரது தன்னிச்சையான நிலையியற்கட்டளை உருவாக்கத்தை உயர் நீதிமன்றம் கடந்தவாரம் நிராகரித்திருந்த நிலையில் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குறித்த வழக்கை இன்றைய தினம் திங்கட்கிழமை தாக்கல் செய்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் யாழ் மாநகர சபையினை நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற பணித்ததுடன் அதனை புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளித்துள்ளார்.

ஆளுநரது நடவடிக்கைகளை கைவிடக்கோரி யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 28 பேரின் கையொப்பத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மகஜரொன்றும் யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபனால் கையளிக்கப்பட்டநிலையில் தற்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக ஆளுநரது தன்னிச்சையான நிலையியற்கட்டளை உருவாக்கத்திற்கு எதிராக வடமாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ,கே.சிவஞானம் வழக்கு தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments