அமைச்சர் பணிப்பு:அதிகாரி விசாரணையில்

 


இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டு தமிழக மீனவர்களிடமிருந்து இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்த படகுகளை கடற்றொழில் அமைச்சரது பணிப்பில் உள்ளுர் மீனவர்களிற்கு விநியோகித்த கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 105 இழுவைப்படகுகள், மற்றும் கடற்கலங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.எனினும் தமது படகுகள் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதற்குசு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

எனினும் காரைநகர் ,காங்கேசன்துறை ,கிராஞ்சி ,தலைமன்னார் மற்றும் கற்பிட்டி கடற்கரைகளில் வைத்து அவை விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது நீதிமன்றினால் பறிமுதல் செய்ய உத்தரவிட்பபட்ட இழுவைப்படகுகள், மற்றும் கடற்கலங்களை உள்ளுர் மீனவ அமைப்புக்களிற்கு வழங்க கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிற்கு பணிப்புரைவிடுத்திருந்தார்.

அவ்வாறு முல்லைதீவு மீனவ அமைப்பிற்கு வழங்கப்பட்ட படகு கடலில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் படகு உரிமையாளரான தமிழக மீனவர் மேன்முறையீட்டை நீதிமன்றில் செய்துள்ள நிலையில் அமைச்சரது உத்தரவை அமுல்படுத்திய அதிகாரிகள் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர். 


No comments