முல்லையிலும் மீண்டும் புதையலாம்?

 


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடிச் சென்ற 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட குழுவினரிடம், வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட பெறுமதியான பொருட்களை பூமிக்கு அடியில் தேடுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் கிளிநொச்சி மற்றும் கொக்கிளாய் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஏனைய சந்தேக நபர்கள் ஜாஎல, நீர்கொழும்பு, வெல்லம்பிட்டி மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிந்து 14வருடங்கள் கடந்த பின்னரும் புலிகள் காலத்து புதையல்களை தேடுவதில் இராணுவ புலனாய்வு பிரிவின் பின்னனி பற்றி சந்தேகம் எழுந்துள்ளது. 

No comments