பண்ணை அம்மன் விவகாரம்:நீதிமன்றில்தீவக நுழைவாயிலில் நயினாதீவு அம்மனின் வழிபாட்டு சிலை நிறுவப்பட்டு பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.நாளை செவ்வாய்கிழமை அனைத்து இந்து  அமைப்புகளின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாண நீதி மன்றில் ஆஜராகுவதாக தீர்மானித்துள்ளனர்.

சித்திரை புத்தாண்டு தினத்தில் அன்று தீவக நுழைவாயிலில் நயினா தீவு அம்மனின் சிலை ஒன்று வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம் பெற்றமையை அடுத்து யாழ்ப்பாண காவல்துறையினால் சிலையினை அகற்ற அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் யாழ்ப்பாண நீதிமன்றினால் சிலை விவகாரத்துடன் தொடர்புடையோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பு கட்டளை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் நல்லை ஆதீனத்தில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி கலந்துரையாடி நாளைய தினம் இந்து அமைப்புகளின் பிரதிகள் அனைவரும் ஒன்றாக நீதிமன்றத்தில் ஆஜராகுவதென தீர்மானித்துள்ளனர்,

இதனிடையே அனைத்து சட்டத்தரணிகளையும் நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக முன்வருமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ, சரவணபவன் அழைப்பு விடுத்துள்ளார்.

தீவக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள நாக பூசணி அம்மனின் சிலை தொடர்பிலான வழக்கு நாளைய தினம் நீதிமன்றத்தில் இடம் பெற உள்ள நிலையில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.அவ்வேளை அனைத்து சட்டத்தரணிகளையும் நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


No comments