2026 இல் கடன் அதிகரிக்கும்


2022 ஆம் ஆண்டை விட மோசமான நெருக்கடி 2026ல் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.

உள்ளுர் பொருளாதாரத்தை பலப்படுத்த இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் 2026 ஆம் ஆண்டில் கடன் பாரதூரமான விளைவை அனைவரும் அறிந்துகொள்வார்கள் என கூறியுள்ளார்.

மேலும் விவாதத்திற்கு தேவையான முழுமையான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்காமல் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை பற்றி விவாதம் இடம்பெறுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அறத்தொடு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் ரூபாய் நெருக்கடிக்குரிய தீர்வே காணப்படுவதாகவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

கடனை செலுத்த 7 பில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்ற போதும் இந்த ஒப்பந்தத்தில் அதிக கடனை தவிர டொலர் நெருக்கடிக்கு தீர்வு கிடையாது என குற்றம் சாட்டியுள்ளார்.

No comments