புர்கினா பாசோவில் தீவிரவாதிகளால் 33 படையினர் பலி!


கிழக்கு புர்கினா பாசோவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 33 படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 12 படையினர் காயமடைந்தனர் என இராணுவம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 40 பேரைக் படையினர் கொன்றதாக இராணுவம் தெரிவித்துள்ளது. 

மேற்கு ஆபிரிக்க நாடு கடந்த ஏழு ஆண்டுகளாக அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ் குழுவுடன் தொடர்புடைய குழுக்களுடன் போராடும் அரசாங்கப் படைகளுடன் ஜிஹாதி கிளர்ச்சியின் பிடியில் உள்ளது.

இங்கு போரால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பல மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயர வைத்துள்ளது.

புர்கினா பாசோவின் ஆயுதப்படைகள் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் செய்ததா குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் பாதுகாப்புப் படையினரின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து இராணுவத் தலைமை விசாரணையைத் தொடங்கியது.

மூன்று நாட்களுக்கு முன்பு, வடக்கு புர்கினா பாசோவில் இராணுவ சீருடை அணிந்தவர்கள் சுமார் 60 பொதுமக்களைக் கொன்றனர். அதே நேரத்தில் பொதுமக்கள் இறப்பு எண்ணிக்கை சுமார் 150 ஆக இருக்கும் என்று ஐ.நா மதிப்பிடுகிறது.

கப்டன் இப்ராஹிம் ட்ரேயர் ஆட்சிக் கவிழ்ப்பில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, பொதுமக்களின் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் அதிகரித்துள்ளதாக உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

பொதுமக்களைப் பாதுகாக்க அதிகாரிகள் தவறியதால் ஏற்பட்ட ஏமாற்றம் கடந்த ஆண்டு இரண்டு ஆட்சிக் கவிழ்ப்புகளைத் தூண்டியது.

No comments