ஒரே நாளில் 12கோடி வடக்கிலாம்!



இலங்கையின் வடபுலம் போதைப்பொருள் கடத்தலின் மையமாக உச்ச நிலையினை அண்மித்துள்ளது.

காங்கேசன்துறை கடல் வழியாக இலங்கைக்குள் எடுத்து வரப்பட்ட 420 கிலோ கஞ்சா இன்று அதிகாலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து படகில் எடுத்து எடுத்து வந்த 420 கிலோ கஞ்சாவே இன்று அதிகாலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அதனை எடுத்து வந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே தலைமன்னாரை அண்டிய கடற்பகுதியில் நேற்று 4 கிலோகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினரது வழக்கமான சோதனையில் தலைமன்னாரை அண்டிய கடலில் மிதந்துவந்த பையொன்று அவதானிக்கப்பட்டது.

பையை சோதனையிட்டபோது அதிலிருந்த நான்கு பொதிகளிலிருந்து நான்கரை கிலோகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இவற்றின் பெறுமதி சுமார் 6 கோடியே 75 இலட்சம் ரூபா என்று நம்பப்படுகிறது.

ஒரே நாளில் 12கோடி மதிப்பிலான போதைப்பொருள் வடக்கு கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.


No comments