பொலிஸ் வாகனத்திற்கு தீ வைத்த மூவர் கைது
கடந்த மே மாதம் 9ம் திகதி, பொலிஸ் வாகனத்தை தாக்கி தீ வைத்த சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளை சேர்ந்த 18, 31 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment