ஐக்கிய மக்கள் சக்தியினை பிளவுப்படுத்த ஜனாதிபதி ரணில் முயற்சி


ஐக்கிய மக்கள் சக்தியினை பிளவுப்படுத்துவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

கட்சியின் சில உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து, தமக்கான ஆதரவை பெற்றுக்கொள்ள அரசாங்க தரப்பினர் முயற்சித்து வருகின்ற போதிலும், அது சாத்தியப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை கட்டியெழுப்ப பணமில்லாத அரசாங்கம், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க முயற்சிக்கின்ற இந்த நிலையில் ஆளும்தரப்பு உறுப்பினர்கள் பணமில்லாமலேயே எதிர்க்கட்சியுடன் இணையத் தயாராக உள்ளனர் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் அரசியலமைப்பை மீறி தேர்தலை சீர்குலைத்து வருவதாகவும், அதையும் தாண்டி புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டுவந்து மாணவர்களையும் சாதாரண மக்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments