மாகாணசபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் !


1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் இன்று காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் பிரத்தியேக உறுப்பினர் சட்டமூலம் 2019 ஆம் ஆண்டு அரச வர்த்தமானியில் மாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்டமூலமாக வெளியிடப்பட்டது.

நாடாளுமன்றம் இந்த சட்டமூலத்தை ஏற்றுக்கொண்டால், தொடர்ந்தும் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை முன்னைய வாக்களிப்பு முறையிலேயே நடத்த முடியும்.

மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

எவ்வாறாயினும், இது ஐந்து வருடங்களுக்கும் மேலாக மாகாண சபைத் தேர்தல்களை தாமதப்படுத்த இது வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments