யாழில். கிணற்றில் தண்ணீர் அள்ளும்போது கிணற்றினுள் விழுந்தவர் உயிரிழப்பு


தண்ணீர் அள்ளும் போது கிணற்றினுள் தவறி வீழ்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த முத்துக்குமார் , அப்புத்துரை (வயது 73) என்பவரே உயிரிழந்துள்ளார். 

வீட்டு கிணற்றில் நேற்றைய தினம் புதன்கிழமை தண்ணீர் அள்ளும் போது , கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என வட்டுக்கோட்டை பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது . 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments