புலம்பெயர் தமிழரின் நிதி பங்களிப்பில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட வீடு கையளிப்பு


விபத்து சம்பவம் ஒன்றினால் மாற்றுத்திறனாளியான குடும்ப தலைவரை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு புலம்பெயர் தம்பதியினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதி அனுசரணையில் , இராணுவத்தினரின் பங்களிப்புடன் வீடொன்று கட்டி , கையளிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் துன்னாலை தெற்கு ஜே/ 370 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் ஐந்து பேர் அடங்கிய குடும்பம் ஒன்றின் குடும்ப தலைவர் விபத்து ஒன்றில் சிக்கி மாற்றுதிறனாளி ஆனார். 

அக்குடும்பத்தினருக்கு கனடாவில் வசிக்கும் தம்பதியினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஆகியவற்றின் நிதி பங்களிப்பில் , நான்காவது சிங்க ரெஜிமென்ற் படைப்பிரிவின் ஆளணி மற்றும் கட்டுமான உதவியுடன் வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. 

குறித்த வீட்டினை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு , நான்காவது சிங்க ரெஜிமென்ட் லெப்டினன்ட் கேணல் தவுலுகல தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சொர்ண போதொட்ட கலந்து கொண்டு வீட்டினை பயனாளியிடம் கையளித்தார்.

No comments