ஊதியப் பிரச்சினை: வேலை நிறுத்தத்தில் பிரித்தானியாவில் கடவுச்சீட்டு வழங்கும் ஊழியர்கள்


பிரித்தானியாவில் கடவுச்சீட்டு வழங்கும் ஊழியர்கள் ஊதியம் மற்றும் நிபந்தனைகள் குறித்து தகராற்றினால் ஐந்து வாரங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் பணிபுரியும் பொது மற்றும் வணிகச் சேவைகள் (PCS) சங்கத்தின் உறுப்பினர்கள் ஏப்ரல் 3 முதல் மே 5 வரை இந்த நடவடிக்கையில் பங்கேற்பார்கள். இதேநேரதம் பெல்ஃபாஸ்டில் பணிபுரிபவர்கள் வாக்களிக்கப்பட்டு வேலைநிறுத்தத்தில் சேரலாம்.

கோடைகாலத்திற்கு முன்னதாக கடவுச்சீட்டுக்களை வழங்குவதில் இப்போராட்டம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழிற்சங்கம் எச்சரித்தது.

பிரித்தானியா முழுவதும் கடவுச்சீட்டு அலுவலகத்தில் 4,000 க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள். அதில் நான்கில் ஒரு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

No comments