வருகிறது புதிய சட்டம்: சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தஞ்சம் கோரமுடியாது!


பிரித்தானிய நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது என பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் புகலிடம் கோர அனுமதிக்கமாட்டோம் என்றும், அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆங்கிலக் கால்வாய் வழியாக ஐரோப்பாவில் இருந்து சிறிய படகுகளில் வரும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க பிரித்தானிய அரசு இந்த வாரம் புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாக கூறப்படுகிறது. 

No comments