புதுக்குடியிருப்பில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!


புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரிடம் பணம் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

700 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேகநபர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments