மகேஸ் சேனாநாயக்கவிற்கு கதிரை!பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்குமாறு, முன்னாள் இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்கவை, ஆளுங்கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சிலர், தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்கவுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக இடம்பெற்று வருகின்றன எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.

அதேவேளை, தற்போதைய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ணவுக்கு வெளிநாட்டு தூதுவர் பதவியொன்று வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச இலங்கை படைகளை முழுமையாக நம்பியிருந்த போதும் இராணுவத்தளபதி சவேந்திரசில்வா இறுதி நேரத்தில் அவரை கைவிட்டிருந்தார்.இதனால் திருட்டுத்தனமாக இலங்கையை விட்டு தப்பியோடவேண்டிய சூழல் கோத்தபாயவிற்கு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் பாதுகாப்பு படைகளை கோத்தபாய கைவிட்டுள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய விசுவாசிகளை களையெடுக்க முற்பட்டுள்ளார்.

பாதுகாப்பு துறையில் சிற்சில மாற்றங்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறு மாற்றங்கள் இடம்பெற்ற பின்னர் தகுதியானவர்கள் அந்தந்த இடங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும் என் நோக்கத்துடனேயே இவ்வாறான மாற்றம் இடம்பெறுகின்றதென ரணில் ஆதரவு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.


No comments