அமெரிக்க உளவாளி ரஷ்யாவில் கைது! குடிமக்களை வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்து!!


ரஷ்யாவில் வசிக்கும் அல்லது பயணிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "அமெரிக்க குடியுரிமைப் பத்திரிக்கையாளரை கைது செய்த ரஷ்யாவின் அறிவிப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நீங்கள் ரஷ்யாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க குடிமகனாக இருந்தால். தயவுசெய்து உடனடியாக வெளியேறவும்" என்று அதில் ஆண்டனி பிளிங்கன் பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவில் உளவு பார்த்ததற்காக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை செய்தியாளர் நேற்று கைது செய்யப்பட்டதையடுத்து ரஷ்யாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்க செய்தியாளர் ரஷ்யாவில் உளவு பார்த்து கையும் களவுமாக பிடிபட்டதால் அவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் சேருவதற்கு முன்பு, 31 வயதான கெர்ஷ்கோவிச் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் ஏவ்பி இல் பணியாற்றினார். அவர் கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கும் ரஷியாவிற்கும் இடையே ஒரு முக்கிய மோதல் புள்ளியாக பார்க்கப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து இரு வல்லரசு நாடுகளுக்கு இடையேயான உறவில் கசப்பு அதிகரித்து வருகிறது.

No comments