தேர்தல் செலவை கட்டுப்படுத்து - வீதி நாடகம்


தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (CMEV) ஏற்பாட்டில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது.

யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை குறித்த விழிப்புணர்வு நாடகம் இடம் பெற்றது.

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம் தொடர்பாகவே விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது.

இதன் போது பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் வீதி நாடகத்தை பார்த்ததை அவதானிக்க முடிந்தது.







No comments