மோடிக்கு நோபல் பரிசா? வேண்டவே வேண்டாம்!



இந்திய பிரதமரிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசை வழங்கும் முயற்சிகளிற்கு வடகிழக்கை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இந்திய பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பது இலங்கையின் வடகிழக்கில் உள்ள தமிழர்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே சாத்தியமாகுமென வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கான 'மிகப்பெரிய போட்டியாளராக' பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், இது பொய்யான செய்தி என்று நோர்வே நோபல் கமிட்டியின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தானை விடுவித்ததற்காக இந்திரா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் மோடி; தமிழர்களை இனப்படுகொலையில் இருந்து காப்பாற்ற எதையும் செய்யவில்லை.

மோடி இலங்கைக்கு வருகை தந்த போது தமிழர்களுக்கு கூட்டுறவு கூட்டாட்சியை பெற்று தருவதாக உறுதியளித்ததாகவும் குடும்பங்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன. 


No comments