காணி மோசடியில் டக்ளஸ் அன்கோ!
வடமாகாணத்தில் காணி மோசடியில் டக்ள்ஸ் தேவானநதா ஆதரவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
காணி உறுதிப்பத்திரப் பதிவு மோசடியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் தொடர்பான விபரங்களை வெகுவிரைவில் அம்பலப்படுத்துவோம் என ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் காணிப் பதிவு விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் பாரிய மோசடிகள் இடம்பெறுகின்றன.
வடக்கு மாகாணத்தில் காணிப் பதிவு விவகாரத்தில் பாரிய மோசடிகள் இடம்பெறுகின்றன. யுத்த காலத்தில் அரச அதிகாரிகள் முறையாகச் செயற்பட்டார்கள்.
ஆனால் தற்போது ஒருசில அதிகாரிகள் முறையற்ற வகையில் செயற்படுவதால் ஒட்டுமொத்த அரச அதிகாரிகள் மீதும் களங்கம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே காணி உறுதிப்பத்திரப் பதிவு மோசடியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் தொடர்பான விபரங்களை வெகுவிரைவில் அம்பலப்படுத்துவோம்.
Post a Comment