ஆட்சியை ஆட்டவேண்டாம்:இராணுவ புலானய்வு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாண விஜயத்தை கண்டித்தும் யாழ்ப்பாணத்தை குழப்ப வேண்டாமென தெரிவித்தும் போராட்டமொன்று இராணுவ புலனாய்வு பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ் நகரில் ஒன்று கூடியவர்கள் தீடீரென பேரணியாக வந்து ரிம்மர் மண்டபம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது காணமல்போனோரை விடுதலை செய், அரசியல் கைதிகளை விடுதலை செய், வன்முறை வேண்டாம், யாழ்ப்பாணத்தை குழப்பாதே போன்ற கோஷங்களை எழுப்பினர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தின் ஒன்றுகூடியபோதே குறித்த போராட்டம் இடம்பெற்றது.


No comments