சொலமினிற்கு முன்னணி ஆதரவுமாநகரசபையில் கூட்டமைப்பு வென்ற போது   முதலில் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறிலை நிறுத்தினால் ஆதரவளிக்கப்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிபந்தனை விதித்திருந்த நிலையில் ஆர்னோல்டை நிறுத்தபட்டிருந்தார்.அதனால் முன்னணி ஆதரவளிக்கவில்லையென  சொல்லப்பட்ட நிலையில் கூட்டமைப்பு தற்போது சரியான முடிவை எடுத்திருப்பதாகவும் எதிர்வரும் 10ம் திகதி யாழ் மாநகர சபைக்கு புதிய மேயர் தெரிவின் போது முன்னணி ஆதரவளிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ் மாநகர சபைக்கான புதிய மேயர் தெரிவுசெய்யப்படவுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் மேயர் வேட்பாளர் தெரிவு யாழ் மாட்டின் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற பின்னர் கட்சித் தலைவரின்  தமிழரசுக் கட்சி மேயர் வேட்பாளராக தமிழரசுக் கட்சி மாநகரசபை உறுப்பினர் சொலமன் சிறில் களமிறக்கப்படவுள்ளார்.

மாநகர சபை இயங்கும் வரை மேயராகத் தெரிவுசெய்யப்படும் சிறிலுக்கு அனைத்து தமிழரசுக் கட்சி மாநகரசபை உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவரென கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளனர்.


No comments