நாய்க்கு பிஸ்கெட்!சிங்கள பெளத்த மயப்படுத்தப்பட்டுன்ள தொல்லியல் திணைக்களத்திற்கு பேருக்கு இருவருரை இணைத்துள்ளது ரணில் அரசு.ஈபிடிபி மற்றும் அரச விசுவாவிகளான இருவரையே இலங்கை அரசு நியமித்துள்ளது.

தொல்பொருள் திணைக்களத்துக்கான ஆலோசனை குழுவில் இரு தமிழ் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, வரலாற்றுத்துறையின் முன்னாள் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

19 உறுப்பினர்களை கொண்ட இந்த ஆலோசனைக் குழுவில் அஸ்கிரிய பௌத்த பீடத்தின் அநுநாயக்க வெண்ட்ருவே உபாலி தேரர், கலாநிதி பஹமூனே சுமங்கல தேரர், எல்லாவெல மேதானந்த தேரர், பேராசிரியர் இந்துராகரே தம்மரத்ன தேரர், கொழும்பு ஷாஹிரா கல்லூரியின் அதிபர் ஏ. ஆர். மரிக்கார் மொஹமட் ரிஸ்வி ஆகியோரும் உள்ளடங்குவர்.


இந்த ஆலோசனை குழு இரண்டு வருடங்கள் இயங்கும்.


இவர்கள், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளருக்கு ஆலோசனைகளை வழங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.


மேலும், இந்தக்குழு நியமிக்கப்பட்டமையை வெளிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் புத்தசாசன சமய மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவால் நேற்று வெளியிடப்பட்டது.

No comments