கடலட்டை பண்ணைகளிற்கு நடமாடும் சேவையின் கீழ் அனுமதி

 



பூநகரியின் பிரதேசத்திற்குட்பட்ட கடலட்டைப் பண்ணைகளிற்கான வியாபார உரிமத்தினை வழங்க பூநகரி பிரதேசசபை முன்வந்துள்ளது.

பல்வேறு தரப்புக்களது கோரிக்கையினையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை நடமாடும் சேவையின் கீழ் வியாபார உரிமத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபையின் செயலாளர் தெரிவித்தார்.

பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் கடலட்டைப் பண்ணைகளிற்கு வியாபார வரியினைச்செலுத்தி முறையாக அனுமதியினைப் பெற்ற பின்னரே தொழில்சார் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இவ்விடயம் தொடர்பில் உரிய வருடாந்த தொழில் அனுமதியினைப் பெற்றக்கொள்வதற்கு ஏதுவாக நடமாடும் சேவை மூலம் கடலட்டைப் பண்ணைகளிற்கான வியாபார  வரி மற்றும் உரிமத்தை வழங்குவதற்காக பூநகரி பிரதேச சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் பின்வரும் விபரப்பட்டியல்களுக்கு அமைவாக நடமாடும் சேவையில் பின்வரும் ஆவணங்கள் சகிதம் சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நடமாடும் சேவை பற்றிய விபரம்:-

இரணைதீவு -

திகதி- 27.03.2023

நேரம்- காலை 10.30- மாலை 3.00

இடம்- இரணைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம்

நாச்சிக்குடா -

திகதி- 28.03.2023

நேரம்- காலை 10.30- மாலை 3.00

இடம்-  நாச்சிக்கடா கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம்

வலைப்பாடு -

திகதி- 30.03.2023

நேரம்- காலை 10.30- மாலை 3.00

இடம்- புனித அன்னம்மாள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம்

பூநகரி -

திகதி- 31.03.2023

நேரம்- காலை 10.30- மாலை 3.00

இடம்- பிள்ளையார் சனசமுக நிலையம் 


வீணான அலைச்சலை தவிர்க்க கடலட்டை பண்ணை உரிமையாளர்கள் நடமாடும் சேவையின் கீழாக பயனை பெற்றுக்கொள்ளமுடியுமெனவும் பூநகரியின் பிரதேசசபை செயலாளர் அறிவித்துள்ளார்.






No comments