இந்திய கடன் : கால எல்லையை நீடிக்க இலங்கை பேச்சு


இந்தியா வழங்கிய 01 பில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதிக்காக வழங்கப்பட்ட இந்த கடன் உதவி எதிர்வரும் 17ம் திகதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் பொருளாதாரம் முன்னேற்றம், அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பிற்கு மத்தியில் இந்த நீடிப்பு பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

குறித்த நிதியுதவியில் சுமார் 300 மில்லியன் டொலர்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை 6-12 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் விரும்புவதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்தியாவிடம் இருந்து எந்தவித உடன்பாடும் இதுவரை எட்டப்படவில்லை என நிதி அமைச்சின் வட்டார தாவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்வதற்கான சீனாவின் நிதி உத்தரவாதத்தை நேற்று பெற்றுக் கொண்ட இலங்கை, இந்த மாத இறுதிக்குள் கடனுதவியை பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments