நெடுந்தீவில் கைதான 12 தமிழக கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் ஏப்ரல் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 12 கடற்தொழிலாளர்களும் நேற்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போது , கடற்படையினர் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 12 கடற்தொழிலாளர்களும் கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் ஊடாக நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து 12 பேரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
Post a Comment