மாதகல் கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான படகும் 150 கிலோ கஞ்சாவும் மீட்பு


யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரை பகுதியில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு  150 கிலோ கஞ்சாவும் சந்தேகத்திற்கு இடமான படகொன்றினையும் கடற்படையினர் மீட்டுள்ளனர். 

கடற்கரையை அண்டிய பற்றை காடொன்றினுள் சந்தேகத்திற்கு இடமான முறையில் படகொன்று மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , அங்கு விரைந்த கடற்படையினர் படகினை மீட்டனர். 

அதன் போது , அப்பகுதியை சோதனையிட்ட போது பொதி செய்யப்பட்ட நிலையில் 150 கிலோ கேரளா கஞ்சாவையும் மீட்டனர். 

படகின் உரிமையாளர் தொடர்பிலும் , கஞ்சா மீட்கப்பட்டமை தொடர்பிலும் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  


No comments