அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன !


மேல்மாகாண பாடசாலைகளில் புதன்கிழமை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 9, 10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான, தவணைப் பரீட்சை இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments