அத்துமீறிய தமிழக கடற்தொழிலாளர்களினால் 12 இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம்


யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்பரப்பில் கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களின்  வலைகளை தமிழக கடற்தொழிலாளர்களின் இழுவைமடி படகுகளால் சேதமாக்கப்பட்டுள்ளன. 

கடந்த சில தினங்களாக இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் தமிழக கடற்தொழிலாளர்களின் இழுவை மடி படகுகளால் யாழ்ப்பாண கடற்தொழிலாளர்களின் வலைகள் சேதமாக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் நேற்றை தினம் புதன்கிழமை மூன்று மீனவர்களின்

 சுமார் 12லட்சம் பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளன. 

அது தொடர்பில் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களினால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


 

No comments