கழிவு நீர் குழிக்குள் விழுந்து இரு மாநகர சபை ஊழியர்கள் உயிரிழப்பு


கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் சேவையில் ஈடுபட்டிருந்த போது, கழிவு நீர் வௌியேற்றும் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை  கழிவு நீர் வௌியேற்றும் குழியை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் குறித்த குழியில் விழுந்துள்ளார்.

பின்னர் அவரை காப்பாற்ற மற்றைய நபரும் கழிவு நீர் வௌியேற்றும் குழியில் இறங்கிய வேளை, அவரும் கழிவு நீர் வௌியேற்றும் குழியில் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆபத்தான நிலையில் கழிவு நீர் வௌியேற்றும் குழியில் விழுந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments