சுவிசின் பேர்ண், சூரிச் மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் நிகழ்வுகள்

சிங்களப் பேரினவாத அரசு தமது எழுபத்தைந்தாவது சுதந்திர நாளைக் கடைப்பிடிக்கும் இச்சூழலில் தாயகத்தில் தமிழர்களின் மீது தொடர்ச்சியாக

மேற்கொள்ளப்பட்டு வரும் இனஅழிப்பினை வெளிப்படுத்தும் விதமாக சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மிகவும் காத்திரமான கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் சுவிஸ் நாட்டிலும் பேர்ண், சூரிச் மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தவர்கள் சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கெதிராகவும், ஒற்றையாட்சிக்கெதிராகவும், இனவழிப்பிற்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், 13ம் திருத்தச் சட்டத்தை நிராகரித்தும் தமது எதிர்ப்புக்களையும் பதாதைகளூடாக வெளிப்படுத்தியிருந்ததோடு அதுசார்ந்த துண்டுப்பிரசுரங்களை வேற்றின மக்களுக்கும் வழங்கியிருந்தனர். 


No comments