திருகோமலையிருந்து மட்டக்களப்பு நோக்கி நகரந்தது பேரணி

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்த வடக்கில்

இருந்து கிழக்கு நோக்கிய பேரணி நேற்று இரவு (06) திருகோணமலையை சென்றடைந்தது. பேரணியில் பேரெழுச்சியுடன் திருகோணமலை தமிழ் மக்களும் உறவுகளும் இணைந்திருந்தனர்.

குறித்த பேரணி இன்று திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று அங்கு பேரெழுச்சியுடன் பேரணி நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி யாழ். பல்கலைக்கழகம் மாணவர்கள் ஏற்பாடு செய்த வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாளான இன்றையதினம் பேரணி வெருகல் சித்திரவேலாயுத சாமி கோவில் இருந்து நகரந்து மட்டக்கிழப்பு நோக்கிச் சென்றது.


No comments