துருக்கி - சிரிய நிலநடுக்கம் இதுவரை 16,000 பேர் உயிரிழப்பு!! 50,000 பேர் காயம்!!


கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,035 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12, 873 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 3, 162 பேர் உயிரிழந்துள்ளனர். இரு நாட்டிலும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

கட்டிட இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் வெளிவருகின்றன. இதனால் உயிரிழந்தவர்களின் உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், கடந்த 40 மணி நேரத்திற்குள் மட்டும் 500க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.No comments