அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளது!



யாழ்ப்பாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளதாக யாழ், மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சங்கத் தலைவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அவர், நெடுந்தீவு தொடக்கம் நைனா தீவு, எழுவைதீவு, அனலதீவு, மாதகல், பருத்தித்துறை, வடமராட்சி வரை இந்திய மீனவருடைய ஆதிக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.

இழுவை மடி ஊடாக எமது தொழிலாளர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.  கடந்த வாரம் 100 தொடக்கம் 150 வரையிலான படகுகள் கரை அளவுக்கு வந்து தொழிலாளர்களுடைய சொத்துக்களை நாசம் செய்துள்ளன. 

கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் உடைய வலைகள் அறுக்கப்பட்டு சொத்துக்கள்  நாசம் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே இந்திய மீனவர்களது அத்துமீறலை கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில் அமைச்சரும் அரசாங்கமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


No comments