கனடாவில் பராமரிப்பு மையத்தினுள் பேருந்து புகுந்ததில் இரு குழந்தைகள் பலி!


கனடாவின் மொண்ட்ரீல் அருகேயுள்ள லாவல் நகரில், குழந்தைகள் பராமரிப்பு மையத்தினுள் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பெற்றொர் தங்களது குழந்தைகளை பராமரிப்பு மையத்தில் விட்டுச் சென்ற நேரத்தில், அரசு பேருந்து ஒன்று பராமரிப்பு மையத்தினுள் புகுந்து விபத்துக்குள்ளானது.

கொலை மற்றும் கவனக்குறைவுடன் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். 

இவ்விபத்து வேண்டுமென்றே நடத்தப்பட்டது என நாங்கள் நினைக்கிறோம். ஆனால் உள்நோக்கம் எங்களுக்குத் தெரியாது என்று லாவல் காவல்துறைத் தலைவர் பியர் ப்ரோசெட் கூறினார்.

பேருந்து ஓட்டுநர் சுமார் 10 ஆண்டுகளாக பேருந்து நிறுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆனால் அவரது கோப்பில் எந்தவித தவறான குறிப்புக்கள் இதுவரை இடம்பெற்றிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments