ஏ.ஆர்.ரகுமானிற்கு நேரமில்லை:அண்ணாமலை கச்சேரியாம்!இந்தியா அரசின் நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட கலாச்சார மண்டப திறப்பு விழாவில் முன்னணி இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வருவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகம் அறிவித்து வந்திருந்த போதும் இறுதியில் மீன்வள மத்திய இணைஅமைச்சர் அடங்கிய குழுவே  இன்றுபலாலி சர்வதேச விமானத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன், மற்றும் அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசின்உயர்மட்ட  குழு பலாலி சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்திருந்தது.

யாழ்  இந்திய துணைத் தூதுவர், சிவசேனை அமைப்பின் தலைவர் ,கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான்  தலைமையிலான அதிகாரிகள் இந்திய உயர்மட்ட குழுவினை மாலை அணிவித்து,பொன்னாடை போர்த்தி  வரவேற்றனர் இந்திய அரசின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும்  நிகழ்வில் கலந்துகொள்வதற்காக  யாழ்ப்பாணத்துக்கு நாளை இலங்கை ஜனாதிபதி வருகை தரவுள்ளார்.இந்நிலையில் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இன்று மதியம்  இந்திய குழுவினர் வருகை தந்திருந்தனர்.

இன்று மதியம்  வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து மதிய விருந்துப சாரத்திலும் குழுவினர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் யாழ்  பொது நூலகத்தில் இடம்பெற்ற  உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் காங்கேசன் துறைக்கு சென்ற இந்திய அமைச்சர் காங்கேசன் துறைக்கும்  காரைக்காலுக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

நாளைய தினம் இந்திய அரசின் நிதி பங்களிப்பில்புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள  மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு செல்ல உள்ளதாக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசுக்கள் தொடர்பிலான தமிழ் மக்களது மனநிலை தொடர்ந்தும் விரோதநிலையிலேயே உள்ளது.

இந்நிலையில் மோடியினால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட கலாச்சார மண்டபத்தை பல தடவைகளாக திறந்து வைத்து மலின அரசியலை இலங்கை இந்திய அரசுக்கள் முன்னெடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


No comments