வைத்தியர் சிவரூபனுக்கு அமோக வரவேற்பு!

 


பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபனுக்கு இன்றைய தினம் புதன்கிழமை அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

கிளிநொச்சி – பளை பிரதேச வைத்தியசாலையில் கடமையிலிருந்தபோது 4ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் பளை பிரதேச பிரதேச மக்களாலும் மருத்துவமனை ஊழியர்களாலும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டார்.

அதனை தொடர்ந்துமருத்துவர் சிவரூபன் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

No comments