முஜுபர் ரஹ்மான் ஓய்வு!இலங்கை ஜனாதிபதி என்னை நேசித்தால் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் முஜுபர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை இராஜினாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதி தமக்கு தூது அனுப்பியதாக பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பொய்யானது எனவும் ஜனாதிபதிக்கு அப்படியான அன்பு இருந்தால் செய்திகளை அனுப்பாமல் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தேர்தலை நடத்தி உண்மையான அன்பு இருப்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் முஜுபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியிருந்தார்.

தனக்கு வயதாகும் வரை அரசியலில் இருக்கும் எண்ணம் இல்லை என கூறிய முஜுபர் ரஹ்மான்,அவ்வாறு வயதாகிவிட்டால், ஜனாதிபதிகள் போல் தானும் வாய்க்கு வந்ததெல்லாம் உளருவேனோ என்ற பயம் இருப்பதால் வயதாகுவதற்கு முன்னரே அரசியல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

கொழும்பு மாநகரசபை தேர்தலில் போட்டியிட ஏதுவாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments