நிலாவரை புத்தர் சிலை அகற்றப்பட்டது!


யாழ்ப்பாணம், நிலாவரைப் பகுதியில் காணப்பட்ட புத்தர் சிலை பிரதேச சபையின் தலையீட்டை அடுத்து இன்றைய தினம் சனிக்கிழமை அந்தச் சிலை அகற்றப்பட்டுள்ளது.

நிலாவரை கிணற்றடி பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

 அந்தப் பகுதியில் காவற் கடமையில் நின்ற இராணுவத்தினரே அதனை அமைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும் பிரதேச சபையின் தலையீட்டை அடுத்து இன்றைய தினம் சனிக்கிழமை பகல் அது அகற்றப்பட்டது.

No comments