டிக்டோக்கை நீக்குமாறு அரசியல்வாதிகளை வலியுறுத்தும் டென்மார்க் நாடாளுமன்றம்


டென்மார்க்கின் பாராளுமன்றத்தில் உள்ள  அரசியல்வாதிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் திறன்பேசிகளில் உள்ள  டிக்டோக் ( TikTok)செயலியில் உளவு பார்க்கும் ஆபத்து உள்ளதால் அதைனை நீக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

சீனாவுக்குச் சொந்தமான பிரபலமான காணொளிப் பகிர்வு செயலி, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பாதுகாப்பு மற்றும் தரவுத் தனியுரிமை தொடர்பாக தீவிர ஆய்வுகளை எதிர்கொள்கிறது.

டென்மார்க் நாடாளுமன்ற சபாநாயகர் சோரன் கேட் இதுகுறித்து இன்று செவ்வாய்க்கிழமை 179 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகக் கூறினார்.

உங்கள் திறன்பேசிகளில் முன்கூட்டியே டிக்டோக் செயலியை நிறுவியிருந்தால் அதை நீக்கிவிட வேண்டும் என்று வலுவான பரிந்துரைகளுடன் மின்னஞ்சல் அனுப்பப்ட்டுள்ளது என்று கூறினார்.

டென்மார்க்கின் சைபர் செக்யூரிட்டி மையத்தின் மதிப்பீட்டிற்குப் பிறகு, உளவு பார்க்கும் அபாயம் இருப்பதாகக் கூறிய நாடாளுமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று அந்த மின்னஞ்சல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று சபாநாயகர் மேலும் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகக் கிளை, சைபர் பாதுகாப்பு நடவடிக்கையாக ஊழியர்கள் பயன்படுத்தும் தொலைபேசிகளில் இருந்து டிக்டோக் ஐ தற்காலிகமாக தடை செய்துள்ளதாகக் கூறியது.

No comments