எரிபொருள் இல்லை:மின்சாரம் இல்லை!

 




நுரைச்சோலை நிலக்கரி ஆலைக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு மார்ச் 6ஆம் திகதி வரை மட்டுமே இருக்கும் என்பதால், திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக 21 நிலக்கரி கப்பல்களை இறக்கிவிட முடியாது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த ஆண்டுக்குத் தேவையான 21 நிலக்கரி கப்பல்களை ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன் பெறுவது கடும் சவாலாக மாறியுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மின்சார சபையின் கடும் நிதி நெருக்கடி காரணமாக இலங்கை வந்துள்ள பன்னிரண்டாவது நிலக்கரி கப்பலுக்கு பணம் செலுத்துவதும் பாரிய சிக்கலாக மாறியுள்ளது.

இந்தக் கப்பல் உட்பட மேலும் ஆறு கப்பல்களுக்கு முன்பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்துக்கும் தாமதமாக கட்டணம் செலுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வருடம் முப்பத்து மூன்று நிலக்கரிக் கப்பல்களை நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 11 கப்பல்கள் தரையிறங்கியுள்ளன.

No comments