ரணிலுக்கு எதிர்ப்பு:அண்ணமலைக்கு சலாம்!யாழ்ப்பாணத்தில் இந்திய கலாசார நிலைய திறப்பு விழாவிற்கான அழைப்பு தமக்கு விடுக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என தமிழத் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கலாசார நிலைய திறப்பு விழா என்ற பெயரில் சிறிலங்காவின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதாக தெரிவித்து அவர் இதனை நிராகரித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைபவ ரீதியாக நாளை திறந்து வைக்கப்படவுள்ள கலாசார நிலைய நிகழ்விற்கு, கடந்த 75 வருடமாக சுதந்திரத்தை அனுபவிக்காது வாழ்ந்து வருகின்ற தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிவாஜிலிங்கம், அதற்கு செல்ல முடியாது எனக் கூறியுள்ளார்.

ஆனால் இந்திய அரசாங்கத்தையோ வருகை தந்திருக்கும் இந்திய பிரதிநிதிகளையோ புறக்கணிக்கவில்லை எனவும் மாறாக 75ஆவது சுதந்திர தினம் என்று போலியாக ஏமாற்றுகின்ற இந்த நிகழ்விற்கு வர முடியாது என்பதை இந்திய மக்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்

No comments