19 நாள் கண்டம்:யாழ்.மாநகரசபைக்கு!



யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளநிலையில் அடுத்துவரும் 19 நாட்கள் கேள்விக்குறியாகியுள்ளது.

உள்ளுராட்சி சபைகளது ஆயுட்காலம் 19ம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது.இந்நிலையில் அடுத்துவரும் 19 நாட்களை எவ்வாறு ஓட்டுவதென்பது மாநகரசபைக்கு தலையிடியாகியுள்ளது.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சபையில் மீண்டும் வரவு செலவுத்திட்டம் முன் மொழியப்பட்ட நிலையில் 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து மீண்டும் யாழ்..மாநகர சபையின் முதல்வர் ஆர்னோல்ட் பதவியிழந்துள்ளார்.

யாழ்..மாநகர சபையின் வரவு செலவு திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் முன் மொழியப்பட்டது. 

சபையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது , வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் ஒருவர் நடுநிலைமை வகித்திருந்தார். அதனால் மாநகர சபையின் செயற்பாடுகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.

முதல்வர் ஆர்னோல்டினால் , 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் கடந்த 13ஆம் திகதி முன் மொழியப்பட்ட போது , தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மீள இரண்டாவது தடவையாக இன்று வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்;டதையடுத்து தேர்ற்கடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கூட்டமைப்பின் சார்பில் முதல்வராக தெரிவு செய்யப்பட்ட ஆனோல்ட்டினை தோற்கடித்து வி.மணிவண்ணன் முதல்வராக தெரிவாகியிருந்தார்.

எனினும் மீண்டும் வி.மணிவண்ணனை தோற்கடித்து ஆனோல்ட் பதவியை கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது ஆனோல்ட் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளார். 



No comments