இரண்டாயிரத்து 400பேர் தமிழகத்திலிருந்து!

 


கச்சதீவு திருவிழாவுக்கு இராமேஸ்வரத்திலிருந்து 72 படகுகளில் 2,400 பேர் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில், இந்த ஆண்டுக்கான விழா மார்ச் 03 மற்றும் 04-ஆம் திகதிகளில் நடைபெறுகிறது.

இதில் கலந்துகொள்ள, இராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள், பொதுமக்கள் வரவுள்ளவுள்ளனர்.

விழா தொடர்பில் முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. பொலிஸ் அத்தியட்சகர் தங்கதுரை, கடற்படை கமாண்டர் முகமதுஷானவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழாவுக்கு இராமேஸ்வரத்திலிருந்து பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 2,400 பேர் 60 விசைப்படகுகள், 12 நாட்டுப்படகுகளில் சென்று வருவதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

தேர்வு செய்யப்பட்ட பொதுமக்கள், பொலிஸ், கடற்படை அலுவலர்களின் பரிசோதனைக்குட்பட்டு அனுப்பப்படுவர். இப்பயணத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களும் அரசு வழிகாட்டுதலை கடைபிடித்து பாதுகாப்பாக சென்று வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments