யாழில் குறளி வித்தை காட்டிய ஆவா அருண்!


சுதந்திர தினமான இன்றைய தினம் ஆவா அருண் தனது அடியாட்களுடன் குறளி வித்தையில் ஈடுப்பட்டிருந்தார்.

சுதந்திர தினமான இன்றைய தினம் தனது அடியாட்களுடனும், உதவி தருவதாக கூறி ஏமாற்றி அழைத்து வந்த மக்களுடன் இலங்கை தேசிய கொடியுடன் பண்ணை கடற்கரை பகுதியில் இருந்து முனியப்பர் கோவில் வரை ஊர்வலம் வந்தார்.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட அருணின் அடியாட்கள் இலங்கை தேசிய கொடியினை அவமதிக்கும் முகமாக, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் குறளி வித்தையில் ஈடுபட்டனர்.

இலங்கையின் தேசிய கொடியினை அவமதிக்கும் முகமாகவும் , வீதி போக்குவரத்துக்கு இடையூறாகவும் செயற்பட்டவர்களுக்கு யாழ்ப்பாண பொலிஸார் பாதுகாப்பு அளித்தனர். 
No comments