கோப்பாயில் சி.ஐ. டி என கூறி வீட்டினுள் நுழைந்தவரால் 38 பவுண் நகை கொள்ளை


புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தவர் 38 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். 

யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப தம்பதியினர் வசித்து வரும் நிலையில் , நேற்றைய தினம் குறித்த நபர் தன்னை புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என அடையாளப்படுத்திக்கொண்டு, வயோதிப தம்பதியினரிடம் விசாரணைகளை முன்னெடுப்பது போன்று பாசாங்கு செய்துள்ளார். 

பின்னர் வீட்டினை சோதனையிட வேண்டும் என கூறி வீட்டினுள் சென்று , அலுமாரிகளை சோதனையிட்டு , அங்கிருந்த 38 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். 

சம்பவம் தொடர்பில் தம்பதியினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments