வளங்களை துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் அதிகரிப்பு


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 60 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை உள்ளூராட்சி நிறுவனங்களின் வளங்களை துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டவிரோத பிரசாரத்தில் ஈடுபடும் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

No comments